Wednesday, December 4, 2013

படிக்க வழி காட்டுங்கள்

உதவி.... உதவி...... உதவி ...

எனது வணக்கங்கள் , அய்யா , எனது நண்பரின் மகன் தற்சமயம் AMET UNIVERSITY இல் MARINE இன்ஜினியரிங் படிக்கிறார், மூன்று வருடங்கள் முடிந்து விட்டது, நல்ல மதிப்பெண் எடுத்து உள்ளார்,UNVERSITY GOLD மெடல் போன செமேஸ்டேரில் வாங்கி உள்ளார், அவர் SHELL ஷிப்பிங் கம்பெனி இல் வேலையும் உறுதி ஆகி விட்டது, இவர் படிப்பு முடித்ததும் உடனே JOIN பண்ண வேண்டியது தான், TRAINING PERIOD இல் 650 USD சம்பளம் , TRAININING முடித்ததும் இன்னும் அதிகம் கிடைக்கும்,ஆனால் தற்சமயம் இவர் இதுவரை படிப்புக்கு நிறைய செலவு செய்து விட்டதால் , நான்காவது வருட படிப்புக்கு கல்லூரியில் தொடர்வதுக்கு பணம் இல்லாமல் கஷ்டபடுகிறார், இவர் CORPORATION பேங்க் மூலம் 7,5 லட்சம் கடனும் வாங்கி விட்டார், இவர் படிப்பை முடிக்க இன்னும் 5 லட்சங்கள் தேவை படுகிறது, இவருக்கு எதாவது நல்ல வழி காட்ட வேண்டும்/

நன்றி 
shiva 9486441834 -- datashiva@gmail.com

Sunday, June 10, 2012

நா ரெடி , நீங்க ரெடியா ? சோலார் பைக்

 
பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சோலார் பைக்கை உருவாக்கி இருக்கிறார் மதுரை மாணவர். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவது கண்கூடு. பெட்ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பைக்குகளுக்கு மாறலாம் என்றால், மின் தடை பிரச்சினை பயமுறுத்துகிறது. கடும் மின் வெட்டால், பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து வாகனங்களை ஓட்டுவதும் சிரமமான காரியமாக இருக்கிறது. இப்படியே போனால் இதற்கு என்னதான் தீர்வு என்று யோசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் கார்த்திக். “பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் இவர். “இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக்கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக்கொண்டேன். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமைத்தோம். ஹெட் லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங்களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது. வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண்பித்தபோது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித்தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் கார்த்திக். “அலுவலகம் செல்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் இரு சக்கர வாகனத்தை வெயிலில் பார்க்கிங் செய்துவிட்டால் போதும். அதன் பிறகு, குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இந்த வண்டியை உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித்து விடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளுக்கென வேறு பணம் செலவழிக்கத் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறும் கார்த்திக் இந்த பைக்கினை உருவாக்க உதவிய நண்பர் ஹரி, மெக்கானிக் முத்து ஆகியோருக்கு நன்றி கூறுகிறார். அடுத்தகட்டமாக, முற்றிலும் சோலார் மூலம் இயக்கும் வகையிலான ஆட்டோ மற்றும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. அதற்காக "ஸ்பான்சர்' கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003ல் தொடர்பு கொள்ளலாம் நன்றி.

எனது முதல் நன்றி நயன் சாருக்கு 

Thursday, September 15, 2011

அண்ணா ஹசாரே என்ற மகான்


அண்ணா ஹசாரே என்று பெரிய மகான் !!! உலகமே போற்றும் துணிச்சல் மிக்க காந்தியவாதி, எல்லோருமே, ஏன் அவருடைய அரசியல் கொள்கைக்கு எதிரானவர்கள் கூட, அவரை பெருமையோடு பார்க்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் அவரை குறை சொல்லி மட்டம் தட்டி கூவி கொள்கின்றனர்.

ஊழலும் , லஞ்சமும் வாங்குகின்ற நாய்கள் தான் அவரை பார்த்து குலைக்கும். பிற்காலத்தில் அவருக்கோ ,அவருடைய சந்ததிக்கோ பயன் அடையும் போது , தான் அந்த நாய்கள் நன்றி காட்டும்,

காந்தியடிகள் அஹிம்ச போராட்டம் நடத்தும் போதும், சில ஆங்கில அடிவருடிகள் , சுய நலமாய் சிந்தித்து,

மோசம், மோசம் காந்தி மோசம் என்று கத்தி இருப்பார்கள் . இப்போதும அதை நினைத்து வருத்தமும் வெட்கமும் அடைவர்.

இன்று உலக வல்லரசின் தலைமை ஒபாமா கூட இந்தியா வந்து காந்தியின் நினைவுகளை ஏந்தி செல்கிறார்,என்றுமே பெரிய போராட்டங்கள் -- இவ்வளவு சுலபமாய் நடத்தியதில்லை, அந்த சாதனை ஐ அண்ணா செய்திருக்கிறார்.

மக்களுக்கு நிறைய உரிமைகள் வேண்டும் , மக்களை ஏமாற்றுபவரை மக்களே அப்புற படுத்தும் உரிமை ,உண்மைக்கு புறம்பாக சொத்து சேர்த்து , அதை பாது காக்க எந்த அளவுக்கும் இறங்கி உள் வேலை , வெளி வேலை செய்து , யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் சாதாரணமாக உள்ளது,இன்று நாம் தப்பு செய்து விட்டு தப்பி விட்டாலும், நாளை நாமோ , நம் சந்ததியோ அதே பிரச்சனையை சந்தித்து பாதித்து பலியாகும் போது யாரும் யாரை குறை சொல்லுவது?

இதற்காக தான் நம் அண்ணா ஹசாரே பாடு படுகிறார், நம்முடைய வாழ்க்கை முறையில் நீதியும் நேர்மையும் இருந்தால் , தெளிவான வாழ்க்கை வாழலாம், தப்பு செய்பவனுக்கு, எந்த அளவு ரிஸ்க் எடுக்க துணிகின்றனோ அதே ரிஸ்கை அவன் அனுபவிக்க வேண்டும்.

தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் , அரசியல் செய்வோர் தங்களின் செல்வாக்கால் எந்த தவறு செய்தாலும் , அவரை தண்டிக்கவே முடியாத படி , முன் ஜாமீன் பின் ஜாமீன் எடுத்து , அப்படியே தண்டித்தாலும் பெயில்,-- நாட்டில் இவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சி செய்து , மக்களின் நல்ல மன நிலையை மாற்றி விட்டனர் .

காலத்துக்கு ஏற்ப மாறி கொள்பவன் தான் புத்திசாலி என்றும் இன்று நாம் வாழ்ந்தால் போதும் , நாளை அது நாளை பார்க்கலாம் என்ற மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டு விட்டார்கள் . இது மக்களை சுய நல வாதிகளாய் மாற்றி விட்டது.

ஒருவன் தவறு செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் பெரிய காரணம் சூழ்நிலை தான், அந்த தவறுகள் நடக்கவே முடியாத சூழ்நிலைகளை லோக் பால் மூலம் உருவாக்கி விட்டால் இந்த நாட்டின் உண்மையான நிலையான வளர்ச்சிக்கு தேவையான விதை யை நற்றாகிவிட்டதை உணரலாம்.

Friday, July 22, 2011

இந்திய இங்கிலாந்து - கிரிக்கெட் போட்டி - நேரடி ஒளிபரப்பு

இந்திய இங்கிலாந்து க்கு இடையே கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது, நீங்கள் எல்லா கிரிக்கெட் மேட்ச் ஐ களையும் லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். மேட்ச் தொடங்கி விட்டது. மேட்ச் ஒளிபரப்பு மிக்க தொழில்நுட்பம் உள்ளது . தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம். ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

வரும் மேட்ச் அட்டவணை கீழே ....

July 21, 2011 10:00 GMT India V England ------- 3rd ODI
July 29, 2011 10:00 GMT India V England ------- 4th ODI
August 06, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 1st T20
August 08, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 2nd T20
August 10, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 1st ODI
August 10, 2011 10:00 GMT India V England -------2nd Test


Friday, July 15, 2011

ஒரு இந்தியரின் வெளிநாட்டு உண்மை நிகழ்ச்சி

ஒரு இந்தியர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்க செல்கிறார் . அங்குள்ள கடன் வழங்கும் வங்கி அதிகாரியிடம் சென்று கடன் கேட்கிறார்.


வங்கி அதிகாரி அந்த இந்தியரிடம் எதற்காக கடன்? என்று கேட்க ,


அதற்கு அவர் ...நான் இந்தியா செல்ல வேண்டும் , எனக்கு $ 5,000 கடன் வேண்டும் மேலும் 2 வாரங்கள் இல் கடனை வட்டியும் முதலுமாய் செட்டில் செய்கிறேன் என்கிறார்.வங்கிகடன் அதிகாரி யோசித்து விட்டு , சரி கடனுக்கு எதாவது பாதுகாப்பு (secuirty) வேண்டும் என்கிறார்.


அதற்கு அந்த இந்தியர், வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ஃபெராரி காரை அடமானமாக வைத்து கடன் தாருங்கள் என்று அந்த கார் சாவி மற்றும் ஆவணங்களை வங்கிகடன் அதிகாரியிடம் தருகிறார்.


வங்கிஅதிகாரி , வங்கி தலைவரிடம் கலந்தாலோசித்து, எல்லா சான்றுகளையும் சரி பார்த்து விட்டு கடைசியில் கடன் தர சம்மதிக்கிறார்.


பரிமாற்றம் முடிந்தது


அந்த இந்தியருக்கு கடன் கொடுத்து அனுப்பிய பிறகு, வங்கி தலைவர் மற்றும் கடன் அதிகாரி இருவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.


யாராவது $ 5,000 கடனுக்கு $ 750,000 மதிப்பு உள்ள ஃபெராரி காரை அடமானமாக வைப்பார்களா ?


என்ன மாதிரியான முட்டாள்கள் , என்று சிரித்து விட்டு , பிறகு அந்த காரை எடுத்து வங்கியின் கேரேஜ் பகுதியில் நிறுத்தி வைத்தனர்.இரண்டு வாரங்களுக்கு பிறகு, அந்த இந்தியர் திரும்பி வந்தார் , கடன் $ 5000 மற்றும் வட்டி $ 15.41 இவற்றை திருப்பி செலுத்தினார்.வங்கிஅதிகாரி , வங்கி தலைவர் மிகுந்த சந்தோசம் அடைந்தனர் ,


அவர்கள் , இந்தியரிடம் , சார் உங்களுடன் நாங்கள் செய்த வரவு செலவு திருப்தியாய் உள்ளது,நீங்கள் அடமானம் வைத்த காரை பார்த்த போதே , நீங்கள் ஒரு மல்டி மில்லியனர் என்று கண்டுபிடித்து விட்டோம்.


பிறகு ஏன் நீங்கள் எங்களிடம் $ 5000 கடன் வாங்க வந்தீர்கள் ? என்றனர்.


அதற்கு அந்த இந்தியர் சிம்ப்ளாய் ஒரு பதில் சொன்னார்.


நியூயார்க் நகரத்தில் எனது காரை 2 வாரங்களுக்கு எங்கு பார்க் செய்தாலும் அதிகம் கட்டணம் ஆகும் , ஆனால் இங்கு $ 15.41 மட்டுமே என்றார்.

இது ஒரு உண்மை சம்பவம்

அந்த இந்தியர் வேறு யாருமில்லை ... "விஜய் மல்லையா

Saturday, July 2, 2011

லிபியா பற்றிய உண்மைகள் --


பிரபல ஊடகங்கள் வெளியிடாத லிபியா பற்றிய வேறு சில உண்மையான விவரங்களை இங்கே காணலாம்.

- லிபியா நாடு யாருக்கும் கடன் பாக்கி தர வேண்டியது இல்லை .(கடங்கார நாடு இல்லை).

- லிபிய குடிமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு அரசாங்கம் எந்த வட்டியும் வசூலிப்பது கிடையாது.


- லிபிய மக்களுக்கு படிப்பும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்.


- மாணவர்கள் தொழில் படிப்பு படிக்கும் போதே சராசரி சம்பளம் வழங்கப்படுகிறது.


-மாணவர்கள் படித்து முடித்த பின்பு, அந்நாட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குகிறது.


-- புதியதாக திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகளுக்கு அரசாங்கமே தனியாக வீடோ அல்லது அபார்ட்மெண்ட்டோ இலவசமாக வழங்குகிறது.


- அந்நாட்டு மாணவர்கள் உலகில் எங்கு சென்று படித்தாலும் அரசாங்கம் அவர்களுக்கு 2500 யுரோவும் மற்றும் தங்கும் வசதி படியும் ( அலவன்சு ) , கார் பராமரிப்பு படியும் வழங்குகின்றது.


- அந்நாட்டு மக்களுக்கு கார்கள், தயாரிப்பு விலையிலேயே விற்கப்படுகின்றன.


- மக்கள் தொகையில் 25%.பல்கலைக்கழக பட்டம் பெற்றவரகள்.

-இந்நாட்டில் வீடு இல்லாதவர்களோ பிச்சைக்காரர்களோ கிடையாது.(சமீபத்திய குண்டு வரை).


-இங்கு ஒரு பாக்கெட் ரொட்டி $ 0.15 மட்டும் தான். ( நம்ம ஊர் மதிப்பு படி அஞ்சு ரூபா தான்)

இந்த நாட்டின் பெருமையை கண்டு மற்ற நாட்டினர் பொறாமை படுவது இயற்கை தான். லிபியா ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது. இதனால் பெரிய அண்ணன் அமெரிக்கா , மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கு லிப்யா மீது வெறுப்பு தோன்றியது.அவர்களால் லிபிய அதிபர் கடாபி யை IMF லும் , உலக வங்கிகளிலும் கடன் வாங்க வைக்க முடியவில்லை. லிபிய அதிபர் கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருக்கலாம். அவர் மக்களுக்கு வேண்டியவராய் இருக்கிறார். மேலும் கடாஃபி அனைத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் , பண பரிமாற்றத்தை USD அல்லது யூரோக்களில் செய்ய வேண்டாம் என்றும் எல்லோரும் தங்கத்தின் மூலம் வியாபாரம் செய்யும் படி வலியுறுத்தினார். பெரிய அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது, கடாஃபி தப்பிப்பாரா? அடுத்த சதாம் ஹுசைனா? நாடகம் நடந்து கொண்டிருக்கிறது .

Thursday, February 17, 2011

உலக கிரிக்கெட் போட்டி - live

உலக கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது, நீங்கள் எல்லா கிரிக்கெட் மேட்ச் ஐ களையும் லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். இன்று மேட்ச் இன் தொடக்க நிகழ்வு நடந்த கொண்டு உள்ளது. தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம்.
ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

செய்தி தொகுப்புகள்