Friday, July 15, 2011

ஒரு இந்தியரின் வெளிநாட்டு உண்மை நிகழ்ச்சி

ஒரு இந்தியர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்க செல்கிறார் . அங்குள்ள கடன் வழங்கும் வங்கி அதிகாரியிடம் சென்று கடன் கேட்கிறார்.


வங்கி அதிகாரி அந்த இந்தியரிடம் எதற்காக கடன்? என்று கேட்க ,


அதற்கு அவர் ...நான் இந்தியா செல்ல வேண்டும் , எனக்கு $ 5,000 கடன் வேண்டும் மேலும் 2 வாரங்கள் இல் கடனை வட்டியும் முதலுமாய் செட்டில் செய்கிறேன் என்கிறார்.



வங்கிகடன் அதிகாரி யோசித்து விட்டு , சரி கடனுக்கு எதாவது பாதுகாப்பு (secuirty) வேண்டும் என்கிறார்.


அதற்கு அந்த இந்தியர், வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ஃபெராரி காரை அடமானமாக வைத்து கடன் தாருங்கள் என்று அந்த கார் சாவி மற்றும் ஆவணங்களை வங்கிகடன் அதிகாரியிடம் தருகிறார்.


வங்கிஅதிகாரி , வங்கி தலைவரிடம் கலந்தாலோசித்து, எல்லா சான்றுகளையும் சரி பார்த்து விட்டு கடைசியில் கடன் தர சம்மதிக்கிறார்.


பரிமாற்றம் முடிந்தது


அந்த இந்தியருக்கு கடன் கொடுத்து அனுப்பிய பிறகு, வங்கி தலைவர் மற்றும் கடன் அதிகாரி இருவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.


யாராவது $ 5,000 கடனுக்கு $ 750,000 மதிப்பு உள்ள ஃபெராரி காரை அடமானமாக வைப்பார்களா ?


என்ன மாதிரியான முட்டாள்கள் , என்று சிரித்து விட்டு , பிறகு அந்த காரை எடுத்து வங்கியின் கேரேஜ் பகுதியில் நிறுத்தி வைத்தனர்.



இரண்டு வாரங்களுக்கு பிறகு, அந்த இந்தியர் திரும்பி வந்தார் , கடன் $ 5000 மற்றும் வட்டி $ 15.41 இவற்றை திருப்பி செலுத்தினார்.



வங்கிஅதிகாரி , வங்கி தலைவர் மிகுந்த சந்தோசம் அடைந்தனர் ,


அவர்கள் , இந்தியரிடம் , சார் உங்களுடன் நாங்கள் செய்த வரவு செலவு திருப்தியாய் உள்ளது,



நீங்கள் அடமானம் வைத்த காரை பார்த்த போதே , நீங்கள் ஒரு மல்டி மில்லியனர் என்று கண்டுபிடித்து விட்டோம்.


பிறகு ஏன் நீங்கள் எங்களிடம் $ 5000 கடன் வாங்க வந்தீர்கள் ? என்றனர்.


அதற்கு அந்த இந்தியர் சிம்ப்ளாய் ஒரு பதில் சொன்னார்.


நியூயார்க் நகரத்தில் எனது காரை 2 வாரங்களுக்கு எங்கு பார்க் செய்தாலும் அதிகம் கட்டணம் ஆகும் , ஆனால் இங்கு $ 15.41 மட்டுமே என்றார்.

இது ஒரு உண்மை சம்பவம்

அந்த இந்தியர் வேறு யாருமில்லை ... "விஜய் மல்லையா

No comments:

Post a Comment

செய்தி தொகுப்புகள்