Saturday, July 2, 2011

லிபியா பற்றிய உண்மைகள் --


பிரபல ஊடகங்கள் வெளியிடாத லிபியா பற்றிய வேறு சில உண்மையான விவரங்களை இங்கே காணலாம்.

- லிபியா நாடு யாருக்கும் கடன் பாக்கி தர வேண்டியது இல்லை .(கடங்கார நாடு இல்லை).

- லிபிய குடிமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு அரசாங்கம் எந்த வட்டியும் வசூலிப்பது கிடையாது.


- லிபிய மக்களுக்கு படிப்பும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்.


- மாணவர்கள் தொழில் படிப்பு படிக்கும் போதே சராசரி சம்பளம் வழங்கப்படுகிறது.


-மாணவர்கள் படித்து முடித்த பின்பு, அந்நாட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குகிறது.


-- புதியதாக திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகளுக்கு அரசாங்கமே தனியாக வீடோ அல்லது அபார்ட்மெண்ட்டோ இலவசமாக வழங்குகிறது.


- அந்நாட்டு மாணவர்கள் உலகில் எங்கு சென்று படித்தாலும் அரசாங்கம் அவர்களுக்கு 2500 யுரோவும் மற்றும் தங்கும் வசதி படியும் ( அலவன்சு ) , கார் பராமரிப்பு படியும் வழங்குகின்றது.


- அந்நாட்டு மக்களுக்கு கார்கள், தயாரிப்பு விலையிலேயே விற்கப்படுகின்றன.


- மக்கள் தொகையில் 25%.பல்கலைக்கழக பட்டம் பெற்றவரகள்.

-இந்நாட்டில் வீடு இல்லாதவர்களோ பிச்சைக்காரர்களோ கிடையாது.(சமீபத்திய குண்டு வரை).


-இங்கு ஒரு பாக்கெட் ரொட்டி $ 0.15 மட்டும் தான். ( நம்ம ஊர் மதிப்பு படி அஞ்சு ரூபா தான்)

இந்த நாட்டின் பெருமையை கண்டு மற்ற நாட்டினர் பொறாமை படுவது இயற்கை தான். லிபியா ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது. இதனால் பெரிய அண்ணன் அமெரிக்கா , மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கு லிப்யா மீது வெறுப்பு தோன்றியது.அவர்களால் லிபிய அதிபர் கடாபி யை IMF லும் , உலக வங்கிகளிலும் கடன் வாங்க வைக்க முடியவில்லை. லிபிய அதிபர் கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருக்கலாம். அவர் மக்களுக்கு வேண்டியவராய் இருக்கிறார். மேலும் கடாஃபி அனைத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் , பண பரிமாற்றத்தை USD அல்லது யூரோக்களில் செய்ய வேண்டாம் என்றும் எல்லோரும் தங்கத்தின் மூலம் வியாபாரம் செய்யும் படி வலியுறுத்தினார். பெரிய அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது, கடாஃபி தப்பிப்பாரா? அடுத்த சதாம் ஹுசைனா? நாடகம் நடந்து கொண்டிருக்கிறது .

1 comment:

  1. நானும் இவ்விபரங்களினை மின்னஞ்சல் ஒன்றில் வாசித்தேன்...

    அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மிக அபாயமானவை. அவை த்தமது அரசின் சாதகங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன..

    ReplyDelete

செய்தி தொகுப்புகள்