Thursday, September 15, 2011

அண்ணா ஹசாரே என்ற மகான்






அண்ணா ஹசாரே என்று பெரிய மகான் !!! உலகமே போற்றும் துணிச்சல் மிக்க காந்தியவாதி, எல்லோருமே, ஏன் அவருடைய அரசியல் கொள்கைக்கு எதிரானவர்கள் கூட, அவரை பெருமையோடு பார்க்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் அவரை குறை சொல்லி மட்டம் தட்டி கூவி கொள்கின்றனர்.

ஊழலும் , லஞ்சமும் வாங்குகின்ற நாய்கள் தான் அவரை பார்த்து குலைக்கும். பிற்காலத்தில் அவருக்கோ ,அவருடைய சந்ததிக்கோ பயன் அடையும் போது , தான் அந்த நாய்கள் நன்றி காட்டும்,

காந்தியடிகள் அஹிம்ச போராட்டம் நடத்தும் போதும், சில ஆங்கில அடிவருடிகள் , சுய நலமாய் சிந்தித்து,

மோசம், மோசம் காந்தி மோசம் என்று கத்தி இருப்பார்கள் . இப்போதும அதை நினைத்து வருத்தமும் வெட்கமும் அடைவர்.

இன்று உலக வல்லரசின் தலைமை ஒபாமா கூட இந்தியா வந்து காந்தியின் நினைவுகளை ஏந்தி செல்கிறார்,என்றுமே பெரிய போராட்டங்கள் -- இவ்வளவு சுலபமாய் நடத்தியதில்லை, அந்த சாதனை ஐ அண்ணா செய்திருக்கிறார்.

மக்களுக்கு நிறைய உரிமைகள் வேண்டும் , மக்களை ஏமாற்றுபவரை மக்களே அப்புற படுத்தும் உரிமை ,உண்மைக்கு புறம்பாக சொத்து சேர்த்து , அதை பாது காக்க எந்த அளவுக்கும் இறங்கி உள் வேலை , வெளி வேலை செய்து , யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் சாதாரணமாக உள்ளது,இன்று நாம் தப்பு செய்து விட்டு தப்பி விட்டாலும், நாளை நாமோ , நம் சந்ததியோ அதே பிரச்சனையை சந்தித்து பாதித்து பலியாகும் போது யாரும் யாரை குறை சொல்லுவது?

இதற்காக தான் நம் அண்ணா ஹசாரே பாடு படுகிறார், நம்முடைய வாழ்க்கை முறையில் நீதியும் நேர்மையும் இருந்தால் , தெளிவான வாழ்க்கை வாழலாம், தப்பு செய்பவனுக்கு, எந்த அளவு ரிஸ்க் எடுக்க துணிகின்றனோ அதே ரிஸ்கை அவன் அனுபவிக்க வேண்டும்.

தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் , அரசியல் செய்வோர் தங்களின் செல்வாக்கால் எந்த தவறு செய்தாலும் , அவரை தண்டிக்கவே முடியாத படி , முன் ஜாமீன் பின் ஜாமீன் எடுத்து , அப்படியே தண்டித்தாலும் பெயில்,-- நாட்டில் இவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சி செய்து , மக்களின் நல்ல மன நிலையை மாற்றி விட்டனர் .

காலத்துக்கு ஏற்ப மாறி கொள்பவன் தான் புத்திசாலி என்றும் இன்று நாம் வாழ்ந்தால் போதும் , நாளை அது நாளை பார்க்கலாம் என்ற மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டு விட்டார்கள் . இது மக்களை சுய நல வாதிகளாய் மாற்றி விட்டது.

ஒருவன் தவறு செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் பெரிய காரணம் சூழ்நிலை தான், அந்த தவறுகள் நடக்கவே முடியாத சூழ்நிலைகளை லோக் பால் மூலம் உருவாக்கி விட்டால் இந்த நாட்டின் உண்மையான நிலையான வளர்ச்சிக்கு தேவையான விதை யை நற்றாகிவிட்டதை உணரலாம்.

செய்தி தொகுப்புகள்