
எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் ஆய்வாளர் கைது
எலக்ட்ரானிக் வோட்டிங் மெசினில் இருக்கும் தவறுகளை ஆய்வு செய்து வெளியிட்ட ஹரி பிரசாத் என்பவரை மெசின் திருட்டு சம்பந்தமாக மும்பை போலீஸ்காரர்கள் ஹைதராபாத்தில் இவரை கைது செய்துள்ளனர். இவர் செல்போன் மூலமாக எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் எவ்வாறு தவறு செய்யும் என்று விளக்குகிறார். தேர்தல் கமிசன் எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் fool proof மெசின் , தவறுக்கு வாய்ப்பே இல்லை என்கிறது. பழைய முறையில் வாக்கு சீட்டு தேர்தலுக்காக 65 வேட்பாளர்களை நிறுத்தலாமா என்று எதிர் கட்சிகள் யோசிக்க , இந்த கைது நடவடிக்கையின் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. தேர்தல் கமிசன் இதை நன்கு ஆராய்ந்து உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
இதுக்காண காணொளி இணைக்கப்பட்டுள்ளது