Sunday, July 4, 2010

புதிய சூரியன்

புது சூரியன்


நமது ஆய்வாளர்கள் சூரியனுக்கு ஒப்பான புதிய நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்டுபிடித்த பெருமை ஜெமினி ஆய்வரங்கத்தில் உள்ள D. Lafreniere, R. Jayawardhana, M. van , M. van Kerkwijk என்பவர்களையே சேரும். இது சூரியனை விட எடையும் , வெப்பமும் கொஞ்சம் குறைவானதாகவும், வயதோ சூரியனை விட மிக குறைவாகவும் உள்ளது. (சூரியன் வயது 5 பில்லியன் வருஷம் என்கிறார்கள் , அப்படி பார்த்தல் இது வெறும் சில மில்லியன் வருஷங்களே ஆனது ). இந்த இளஞ்சூரியன் மிக நுட்பமான அகசிவப்பு கதிர்களால் ஆராய்ந்து பார்த்தபோது இது வியாழன் மாதிரி எட்டு முறை பெரியது என்றும் இதனுடைய தாய் நட்சத்திர கூட்டமைப்பில் இருந்து தூரம் சுமார் 330 முறை பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அளவுகளில் சுற்றுபாதை உள்ளது என்றும் கண்டிபிடித்து உள்ளனர்.


இந்த படம் 2008 -இல் எடுக்கப்பட்டது
, இப்போது தான் NASA உறுதி செய்துள்ளது .


செய்தி தொகுப்புகள்